விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை விவகாரத்தில் புதிய தகவல்

விஜய் ஆண்டனியின் தாயார் கீழ் தளத்தில் தூங்கிக்கொண்டு இருந்த போது மேல் தளத்தில் மீராவின் அறையிலிருந்து சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை, டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவருடைய மகள் மீரா. பிளஸ் 2 படித்து வந்த இவர் கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

விஜய் ஆண்டனியின் மகள் இறப்பு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ள நிலையில், ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் நேரிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதில், விஜய் ஆண்டனியின் தாயார் கீழ் தளத்தில் தூங்கிக்கொண்டு இருந்த போது மேல் தளத்தில் மீராவின் அறையிலிருந்து சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உடனடியாக விஜய் ஆண்டனி மீராவின் அறை ஜன்னலை உடைத்து பார்த்த போது மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்ததாக போலீசாரின் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் மீராவின் கழுத்தில் தூக்கிட்டதற்கான காயங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.