விக்ரம் பிரபு நடித்துள்ள  'ரெய்டு' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!

ரெய்டு திரைப்படம் கன்னடத்தில் சிவராஜ்குமார், தனஞ்சயா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘டகரு’ படத்தின் ரீமேக்காகும்.

சென்னை,

அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் ‘ரெய்டு’. இந்த திரைப்படம் கன்னடத்தில் சிவராஜ்குமார், தனஞ்சயா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘டகரு’ படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா, அனந்திகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இறுகப்பற்று திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு பாராட்டு குவிந்த நிலையில், ரெய்டு திரைப்படமும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தகவலை நடிகர் விக்ரம் பிரபு தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார்.