ரிலீசுக்கு தயாரான 'லியோ'... அனிருத் பகிர்ந்த புகைப்படம்

நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வருகிற 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் வருகிற 19-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பதிவிட்டுள்ளனர்.

அந்த படத்தில், லியோ படத்துக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் இருவரும் கைகோர்த்து நிற்கின்றனர். மேலும், ‘லாக்ட் அண்ட் லோடட்’ (Locked & Loaded) என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.