ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம்

sதமிழில் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் அறிமுகமான ஷாலு ஷம்மு தொடர்ந்து தெகிடி, மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து, பவுடர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலு ஷம்மு கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பகிர்கிறார்.

சமீபத்தில் தனது விலை உயர்ந்த செல்போனை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். நண்பர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து மாயமான செல்போன் தபாலில் அவரது வீட்டுக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது ரசிகர்களுடன் ஷாலு ஷம்மு கலந்துரையாடினார். அரசியல் கேள்வி தவிர்த்து எந்த கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம் என்றார். அப்போது ஒரு ரசிகர் ஷாலு ஷம்முவின் தேகம் பற்றி ஆபாசமாக கேள்வி கேட்டார்.

இதனால் கோபமான ஷாலு ஷம்மு அவரை கண்டிக்கும் வகையில் பதிலடி கொடுத்தார். ஷாலுவின் துணிச்சலை பலரும் வலைத்தளத்தில் பாராட்டி வருகிறார்கள்.