யோகிபாபு படத்துக்கு கானா பாடல் பாடிய கர்நாடக இசை பாடகி

தமிழில் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தை இயக்கி பிரபலமான சிம்புதேவன் தொடர்ந்து பல படங்களை டைரக்டு செய்தார். தற்போது யோகிபாபு நடிப்பில் ‘போட்-நெய்தல் கதை’ என்ற பெயரில் தயாராகும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நாயகனை நோக்கி நாயகி பாடும் வகையில் அமைந்துள்ள ஒரு கானா பாடலை பாட கர்நாடக இசை பாடகியும் பத்மபூஷன் விருது பெற்றவருமான சுதா ரகுநாதனை படக்குழுவினர் அணுகினர்.

தான் பாடும் வகையில் கானா பாடலை உருவாக்கி இருந்ததை அறிந்த சுதா ரகுநாதனும் ஆரோக்கியமான பரிசோதனை முயற்சி என்று சொல்லி பாட சம்மதித்தார்.

ஜிப்ரான் இசையில் இந்த பாடல் பதிவு நடந்துள்ளது. பாடலை பாடிய சுதா ரகுநாதன் தனக்கு பாடல் பிடித்துள்ளது என்று பாராட்டி உள்ளார். இந்த படத்தை பிரபா பிரேம்குமார் தயாரிக்கிறார்.