மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் விஜய்?

விஜய், டோலிவுட் இயக்குநர் கோபிசந்த் மலினேனியிடம் கதை கேட்டதாக கூறப்படுகிறது.

சென்னை,

‘வாரிசு’ படத்தை அடுத்து மீண்டும் தெலுங்கு பட இயக்குநர் உடன் நடிகர் விஜய் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் வெளியான விஜயின் ‘வாரிசு’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை அள்ளியது. இதனிடையே ‘லியோ’ படத்தில் பிசியாக நடித்துவரும் விஜய், டோலிவுட் இயக்குநர் கோபிசந்த் மலினேனியிடம் கதை கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த கதைக்கு நடிகர் விஜய் ஓகே சொன்னதாக கூறப்படும் நிலையில், ‘தளபதி 70’ ஆக உருவாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கோபிசந்த் மலினேனியின், ‘கிராக்’, ‘வீர சிம்ஹா ரெட்டி’ ஆகிய படங்கள் வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.