மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள 'மார்கழி திங்கள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘மார்கழி திங்கள்’. புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் இயக்குனர் சுசீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

பள்ளி பருவத்து காதலை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் தற்போது ‘மார்கழி திங்கள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் வருகிற அக்டோபர் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.