பெண்ணிய தன்மையின் மற்றொரு சொத்து... நடிகை தமன்னா பேட்டி

பெண்ணிய தன்மையின் மற்றொரு சொத்து வலிமை என நடிகை தமன்னா அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் காவாலயா என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இளசுகளை கவர்ந்துள்ளார். இந்த பாடல் பல கோடி ரசிகர்களை சென்றடைந்துள்ளது. யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இந்த நிலையில், நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில், ஒரு பெண் வலிமையுடையவளாக இருக்கும்போது, அது அவளை இருபாலின தன்மையுடையவளாக உருவாக்காது.

பெண்ணிய தன்மையை வலிமை எடுத்து சென்று விடாது. அது அவர்களுக்கான மற்றொரு சொத்து. பெண்கள் எப்போதும் மிகுந்த உள்ளுணர்வுடன் இருப்பவர்கள். அதுவே பெண்களின் இயற்கையான குணம்.

நாங்கள் எப்போதும், ஒவ்வொரு விசயமும் உண்மை என எந்தவித காரணமும் இன்றி நம்புபவர்கள். எங்களுடைய திறமைகளுடன் இந்த பண்பை இணைக்க முடியும்போது, அதனை விட அதிக சக்தி வாய்ந்த எதுவும் கிடையாது.

அதுவே, ஆன்யாவின் (ஆக்ரி சச் தொடரில் அவரது வேடம்) சிறந்த எடுத்துக்காட்டான ஒன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளார். ராப்பீ கிரெவல் இயக்கத்தில், சவுரவ் டே திரைக்கதையில் உருவாகி வரும் ஆக்ரி சச் தொடரில் அபிஷேக் பானர்ஜி, ஷிவின் நரங், டேனிஷ் இக்பால், நிஷு தீட்சித், கிரீத்தி விஜ் மற்றும் சஞ்சீவ் சோப்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதில், நடிகை தமன்னா மர்ம மரணங்களை பற்றி விசாரித்து அவற்றை பற்றிய விசயங்களை வெளி கொண்டு வரும் பணியில் ஈடுபடும் விசாரணை அதிகாரியாக வருகிறார்.

ஆன்யா என்ற இந்த வேடத்தில் நடிப்பதற்காக பல வகையிலும் அவர் தன்னை தயார்படுத்தி கொண்டார். இந்த தொடர் ஓ.டி.டி.யில் வருகிற 25-ந்தேதி வெளிவருகிறது.