பிரபாஸ் பிறந்தநாளை ஒட்டி, சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த 'சலார்' படக்குழு..!

நடிகர் பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு ‘சலார்’ படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

சென்னை,

கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரிக்கிறது.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. ‘சலார்’ திரைப்படம் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று நடிகர் பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு சலார் படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு பிரபாஸ்-க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.