பிரபல நடிகர் காருக்குள் பிணமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம்

அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் மூலம் வினோத் தாமஸ் பிரபலமானார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தை சேர்ந்த நடிகர் வினோத் தாமஸ். இவர் மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும், ஒருமுறை வந்து பார்த்தாயா, ஹப்பி வெட்டிங், ஜுன், நதொலி ஒரு செரிய மீனலா போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இந்நிலையில், 45 வயதான நடிகர் வினோத் தாமஸ் நேற்று இரவு பிணமாக மீட்கப்பட்டுள்ளார். கோட்டயம் மாவட்டம் பம்படி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலின் கார் பார்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் நடிகர் வினோத் தாமஸ் பிணமாக கிடந்துள்ளார்.

இது குறித்து ஓட்டல் நிர்வாகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வினோத் தாமசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.