பிரபல தெலுங்கு நடிகர் அல்லு ரமேஷ் மாரடைப்பால் காலமானார்

பிரபல தெலுங்கு பட நடிகரான அல்லு ரமேஷ் 52 வயதில் மாரடைப்பால் காலமானார்.

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் அல்லு ரமேஷ் (வயது 52). காமெடி நடிகராக பரவலாக ரசிகர் பட்டாளம் வைத்து உள்ள இவர் ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இவருக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதன்பின் அவர் உடனே உயிரிழந்து விட்டார். இதனை அறிந்து ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் வேதனை அடைந்தனர்.

அவரது இந்த மறைவை, ரமேசின் நண்பரான, திரைப்பட இயக்குநர் ஆனந்த் ரவி தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்து வேதனையை தெரிவித்து உள்ளார்.

முதன்முதலாக சிருஜல்லு என்ற படத்தில் நடிக்க தொடங்கிய அவர் பின்னர், மதுரா வைன்ஸ், வீதி, டோலு பொம்மலதா மற்றும் நெப்போலியன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார். கடைசியாக அவரது நடிப்பில் அனுகோனி பிரயாணம் என்ற படம் வெளிவந்தது.

அவரது மறைவை அடுத்து, ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த அவரது நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.