இந்த வழக்கில் விஜய் ஆண்டனி பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் 2016-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. நல்ல வசூலும் பார்த்தது. தற்போது பிச்சைக்காரன் 2-ம் பாகம் தயாராகி உள்ளது. இதில் விஜய் ஆண்டனியே கதாநாயகனாக நடித்து டைரக்டும் செய்துள்ளார்.
பிச்சைக்காரன் படத்தின் 2ம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வெளியாகவுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாங்காடு மூவீஸ் உரிமையாளர் ராஜ கணபதி தொடர்ந்த இந்த வழக்கில் விஜய் ஆண்டனி பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மாங்காடு மூவீஸ் உரிமையாளர் ராஜ கணபதி தனது தயாரிப்பில் எடுக்கப்பட்ட ஆய்வுக்கூடம் படத்தின் கருவையும், வசனத்தையும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்தில் பயன்படுத்தியதாக இந்த வழக்கை தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 12-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது