படுக்கையறை- முத்தகாட்சிகள் குறித்த விமர்சனம்: டுவிட்டர் மாமாக்கள் என கிண்டல் செய்த நடிகை தமன்னா

முத்தக் காட்சிகள் பற்றிய எனது விதி அர்த்தமற்றதாகத் தோன்றியது. அதனால் தான் அந்த விதியை மீறியதாக தமன்னா விளக்கம் அளித்துள்ளார்.

ஐதராபாத்

மில்கி பியூட்டி என அழைக்கப்படும் நடிகை தமன்னா பாட்டியா தற்போது அதிகம் செய்திகளில் வருகிறார்.தமன்னா ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அரண்மனை 4-ம் பாகத்தில் நடிக்க உள்ளார். பிரபல இந்தி நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடரில் இணைந்து நடித்தபோது காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. அதனை அவரும் உறுதி செய்து உள்ளார்.

தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ள ‘ஜீ கர்தா’ என்ற வெப் சீரிஸில் தமன்னா மிகவும் கவர்ச்சியாகவும் படுக்கையறை காட்சிகளிலும் ஆபாசமாக நடித்து உள்ளார்.அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திரையுலகில் முத்தமிடக் கூடாது என்ற கொள்கையை கடைப்பிடித்து வந்தவர்.தமன்னா எந்த சூழ்நிலையிலும் முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று 2016ல் அறிவித்தார். ஆனால் தற்போது தாராளம் காட்டி நடித்து வருகிறார்.

முத்தம் கூட கொடுக்காத தாங்களா எப்படி இவ்வளவு துணிச்சலான காரியம் செய்ய முடிகிறது என்று கேட்கிறார்கள். படுக்கையறை காட்சியில் தமன்னாவின் முகபாவனைகள் ஆச்சரியமாக இருக்கிறது மற்றும் சிலர் வேடிக்கையான மீம்களை உருவாக்கி உள்ளனர்.

தமன்னாவின் சமீபத்திய வெப் சீரிஸ் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஜூன் 29 முதல் நெட்பிலிக்ஸ் இல் ஸ்ட்ரீமிங்கிற்கு தயாராகிறது. இதனால் தமன்னா அடுத்தடுத்து புரமோஷன் வேலைகளில் பிசியாகி விட்டார். சமீபத்தில், புரமோ நிகழ்ச்சியில் பேட்டி அளித்தார்.

2023 லும் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் என்று தமன்னா கடுமையாக கேட்டார். தன்னை கேலி,விமர்சனம் செய்தவர்களை டுவிட்டர் மாமாக்கள் என தமன்னா கிண்டல் செய்தார்.

மேலும் அவர் கூறியதாவது;-

ஹீரோக்கள் வீண் பேச்சு, ரொமான்ஸ் பேசினாலும் சூப்பர் ஸ்டார் ஆகிவிடுகிறார்கள். ஆனா ஒரு பொண்ணு அப்படி நடிச்சாலே அவளோட கேரக்டரை மதிப்பிடுவாங்களாம்.சமூகம் ஏன் இப்படி இருக்குன்னு எனக்கு புரியல.

எனது 18 வருட வாழ்க்கையில் நான் திரையில் முத்தமிட்டதில்லை. முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றும் கடந்த காலங்களில் கூறியுள்ளேன். ஆனால் ஒரு நடிகையாக நான் ஏன் தடைகளையும் விதிகளையும் போட வேண்டும்.

நான் ஏன் நடிகையாக மேலும் வளரக்கூடாது என்று என்னை நானே கேட்டபோது, முத்தக் காட்சிகள் பற்றிய எனது விதி அர்த்தமற்றதாகத் தோன்றியது. அதனால் தான் அந்த விதியை மீறியதாக தமன்னா விளக்கம் அளித்துள்ளார்.

தன் காதலர் விஜய் வர்மாவைப் பற்றி கூறும் போது அவர் சமூகத்தை நன்கு அறிந்தவர். இதை இப்போதெல்லாம் பலர் பார்ப்பதில்லை. அதுதான் விஜய் வர்மாவிடம் எனக்கு பிடித்தது என கூறினார்.

மேலும் திருமணத்திற்கு முன் டெஸ்ட் டிரைவ் என்ற டயலாக் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 டிரெய்லரில் உள்ளது. இதுகுறித்து தமன்னா கூறுகையில், செக்ஸ் பற்றி பேசுவதை முட்டாள்தனமாக நினைக்கிறோம். அதை ஒதுக்கி வைக்க வேண்டும். ஒரு மனிதனின் அனைத்து தேவைகளை போலவே அதுவும் ஒன்று தான் என கூறினார்.