நடிகர் அஜித்குமார் சைக்கிள் ஓட்டும் வீடியோ வைரல்...!

நடிகர் அஜித் குழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டுவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை,

நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியானதையடுத்து அவர் அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த எதிர்பார்ப்பை தீர்க்கும் வகையில் நடிகர் அஜித், இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த திரைப்படத்திற்கான பணிகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை. சில காராணங்களால் இந்த திரைப்படத்தின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் அஜித் குழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டுவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தைகளுக்கு மத்தியில் அஜித் மெதுவாக சைக்கிள் ஓட்டிச் செல்வது, குழந்தைகளை நோக்கி கவனமாக சைக்கிள் ஓட்டிச் செல்லும்படி கை சைகை செய்வது, போன்றவை வீடியோவில் இடம்பெற்று உள்ளது.