ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் படத்தில் இணைந்த இந்தி நடிகர் சாயிப் அலி கான்

என்.டி.ஆர்.30’ என்ற பெயரில் உருவாகி வரும் படத்தில் இந்தி நடிகர் சாயிப் அலி கான் இணைந்துள்ளார்.

ஐதராபாத்,

ராஜமவுளி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். அடுத்ததாக இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இந்த திரைப்படம் ‘என்.டி.ஆர்.30’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் சாயிப் அலி கான் இணைந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை படக்குழுவினர் டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் படப்பிடிப்பு தளத்தில் சாயிப் அலி கான், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.