ஜப்பான் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ஜப்பான் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

சென்னை,

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஜப்பான்’ திரைப்படம் நாளை (நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.