சென்னை புறநகர் விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளருக்கு தன் கைப்பட கடிதம் எழுதிய நடிகர் விஜய்

சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணனை பாராட்டும் வகையில் நடிகர் விஜய் தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதியன்று ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பாக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியதை பாராட்டும் வகையில் நடிகர் விஜய் தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் சரவணன் செய்த பணிகள் குறித்து ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலம் அறிந்து கொண்டதாகவும், அவரது சிறப்பான செயல்பாடுகளைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும் நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய் எழுதிய கடிதம் அவரது ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.