சின்னத்திரை நடிகை மகாலெட்சுமியின் கணவர் ரவீந்தர் சந்திரசேகரன் மீது மோசடி வழக்குப்பதிவு

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், சின்னத்திரை நடிகை மகாலெட்சுமியின் கணவருமானவர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரவீந்தர் சந்திரசேகரன் மீது அமெரிக்கா வாழ் இந்தியரான விஜய் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆன்லைன் மூலம் பண மோசடி புகார் அளித்துள்ளார்.

ரவீந்தர் தன்னிடம் 15 லட்ச ரூபாய் கடனாக பெற்றதாகவும் கடன் தொகையை பல முறை கேட்டும் அவர் திருப்பித்தராமல் மோசடி செய்து வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் விஜய் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்

இந்த புகாரை தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகரன் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்ற பிரிவில் ரவீந்தர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.