ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் லியோ திரைப்படம் கேரளாவில் வெளியானது.
திருவனந்தபுரம்,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் லியோ படம் இன்று வெளியாகவுள்ளது. அதன்படி தமிழகத்தில் காலை 9 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அதிகாலை 4 மணிக்கே கேரளாவில் வெளியானது. படத்தின் முதல் காட்சியை காண ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் வந்தனர். மேலும் தமிழக கேரளா எல்லைப்பகுதியில் ஒரு சில இடங்களில் தமிழிலும் படம் வெளியாகி உள்ளது.