சீரியல்

சீரியல்

சினிமா தாண்டி சீரியலில் கூட இந்த சம்பவங்கள் அதிகம் நடக்க தொடங்கிவிட்டன. சீரியலில் நடிக்கும் பலரும் கூட இதே புகார்களை வைக்க தொடங்கிவிட்டனர். அதாவது சீரியலில் வாய்ப்பு கிடைக்க, ஏதாவது பெரிய ரோல் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு கவுச் கேஸ்டிங் செய்ய சொல்கிறார்கள் என்ற புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. பல முன்னணி சீரியல்களில் கூட இது போன்ற சம்பங்கள் நடக்கின்றன. முக்கியமாக பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால் சீரியலில் வாய்ப்பே கிடைக்காது என்ற நிலையும் கூட பல முறை ஏற்பட்டு உள்ளது.

பிரபல நடிகை

பிரபல நடிகை

சமீபத்தில் கூட பிரபல நடிகை ஒருவர் இந்த புகாரை வைத்துவிட்டு சீரியல் உலகில் இருந்தே பிரேக் எடுத்தார். இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல ஹீரோ ஒருவர் மீது இதே புகார் வைக்கப்பட்டது. அந்த பிரபல ஹீரோ இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். அவரின் படம் ஒன்றிற்கு ஆடிஷன் சென்ற பெண்ணை பாலியல் தேவைக்கு ஆடிஷன் செய்தவர்கள் அழைத்ததாக கூறப்படுகிறது. பாலியல் தேவைகளை பூர்த்தி செய்தால் ஆடிஷனில் வெற்றிபெறலாம். இலையென்றால் வெற்றிபெற முடியாது. படத்தில் வாய்ப்பு வேண்டும் என்றால்.. படுக்க வேண்டும் என்பது போல கேட்டு இருக்கிறார்களாம்.

மீடியா

மீடியா

வெளியே வந்த அந்த பெண்ணும் மீடியாக்களில் இந்த விஷயத்தை கசியவிட்டார். அப்போதே அந்த ஹீரோ மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் இப்படி அந்த ஹீரோ மீது விமர்சனங்கள் வைக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பே அந்த ஹீரோ மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக அந்த ஹீரோ பெண்களை பாலியல் ரீதியாக அழைப்பதாகவும், சினிமாவில் வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை பாலியல் தேவைக்கு பயன்படுத்திக்கொள்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

புகார்கள் என்ன?

புகார்கள் என்ன?

முக்கியமாக சில காலங்களுக்கு முன் பிரபல நடிகை ஒருவர் இதே புகாரை வைத்தார். அந்த புகாரை அவர் இணையத்தில் வெளிப்படையாக சொன்னார். மீடியாக்களில் கூட அதை பற்றி அவர் வெளிப்படையாக பேசி இருந்தார். அப்போதே அந்த நடிகர் உத்தமர் ஆச்சே.. அவரா இப்படி செய்கிறார். வெளியில்தான் உத்தமர் வேடம் போடுகிறார் போல.. உள்ளே எல்லாம் பொய். உள்ளே ரொம்ப மோசம் என்று பலரும் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில்தான் அதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது மீண்டும் அதே நடிகர் மீது அட்ஐஸ்மென்ட் புகார் வைக்கப்பட்டு உள்ளது. இந்த முறை அவர் மீது புகார்கள் வைக்கப்பட கூட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.