Gossips
oi-Jaya Devi
By Staff
|
சென்னை : சீனியர் நடிகரின் மகன் பிரபல நடிகையுடன் மது போதையில் பல இடங்களில் சுற்றித்திரிவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர் என்று பெயர் எடுத்த இந்த மூத்த நடிகர் தற்போது வரை மாஸ் ஹீரோவாக பல மாஸ் படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான படம் சக்கைபோடு போட்டது.
கோலிவுட் சீனியர் நடிகர் : தன்னைப்போல தனது மகனும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை பட்ட சீனியர் நடிகர், தனது மகனுக்காக பலரிடம் சிபாரிசு செய்து கடைசியில், தன்னை மாஸ் நடிகராக சினிமாவில் அடையாளப்படுத்திய இயக்குநர் இயக்கும் கதையில் தனது மகனை நடிக்க வைத்தார். இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் படம் பாதியிலேயே நின்று விட்டது.
சீனியர் நடிகரின் மகன் : இதையடுத்து வேறு ஒரு இயக்குநரை வைத்து படம் எடுத்து முடிக்கப்பட்டு வெளியானது. அந்த படத்தில் சீனியர் நடிகரின் மகன் அட்டகாசமாக நடித்திருந்தார். டீன் ஏஜ் ரசிகர்களை கவரும் வகையில் இந்த திரைப்படம் இருந்ததால், இளசுகள் இந்த படத்தை விரும்பி பார்த்தனர். சீனியர் நடிகரின் மகன் தனது முதல் படத்திலேயே பல கசமுசா காட்சிகளிலும் நடித்திருந்தார்.
வடவாய்ப்பு இல்லை : இதையடுத்து, இரண்டாவது படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் சீனியர் நடிகரின் மகன் சிறப்பான நடிப்பை கொடுத்தபோதும் அடுத்து எந்த படவாய்ப்பும் அமையவில்லை. தற்போது அப்பாவின் அறிவுறுத்தல் படி நல்ல கதைக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.
பிரபல நடிகையுடன் நெருக்கம் : இந்நிலையில், சீனியர் நடிகரின் மகன் தன்னுடன் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், இருவரும் மது அறிந்துவிட்டு உல்லாசமாக பல இடங்களில் சுற்றித்திரிவதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிப்பதற்குள் பெயரை கெடுக்கும் வகையில் மகன் கிசுகிசுவில் சிக்கியதால், சீனியர் நடிகர் டென்ஷனாகி மகனை கண்டபடி விளாசியதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
English summary
Senior actor’s son dating famous actress, மது போதையில் நடிகையுடன் டேட்டிங் செல்லும் சீனியர் நடிகரின் மகன்