bredcrumb

Gossips

oi-Mari S

By Staff

|

சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் அந்த பிரைட் நடிகர் தன்னுடன் நடித்து வரும் அந்த பிகினி பேபியை பார்த்து ரொம்பவே டெம்ப்ட் ஆகி விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

சமீபத்தில் தனது வீட்டையே மனைவி மற்றும் குழந்தைகளுக்காக மாற்றிக் கொண்டு அந்த நடிகர் சென்று விட்டார் என பேச்சுக்கள் அடிபட்டன.

ஆனால், போற போக்கை பார்த்தால் விஷயம் வேறு விதமாக செல்வதாக பகீர் தகவல்கள் புகையத் தொடங்கி உள்ளன.

Popular actor tempted with bikini actress makes his wife angry?

டிராக் மாறும் பிரைட் நடிகர்: அப்பா பார்வையில் இருந்த வரை சரியான டிராக்கில் சென்றுக் கொண்டிருந்த பிரைட் நடிகர் தற்போது டிராக் மாறுவதாக ஷாக்கிங் தகவல்கள் கசியத் தொடங்கி உள்ளன.

மனைவி ஒரு பக்கம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் பிரைட் நடிகர் பிகினி நடிகையின் மயக்கத்தில் இருப்பதாக கிசுகிசுக்கத் தொடங்கி உள்ளது.

அடிக்கடி ரூமுக்கு: ஷூட்டிங் இல்லாத நாட்களிலும் அடிக்கடி பிகினி நடிகை ரூமுக்கு பிரைட் நடிகர் சென்று வருவதாக அதிர்ச்சி தகவலை அள்ளி வீசி வருகின்றனர். அந்த இயக்குநருக்கு இந்த நடிகையை புக் செய்ய சொன்னதே பிரைட் நடிகர் தான் என்றும் நீண்ட நாட்களாகவே அந்த நடிகையுடன் பிரைட் நடிகர் டச்சில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

டெம்ப்ட் ஆன நடிகர்: பல படங்களில் பல்வேறு நடிகைகளுடன் நடித்து வந்தாலும், லிப் லாக் காட்சிகளில் கூட நடிக்க மாட்டேன் என பிடிவாதம் பிடித்து வந்த பிரைட் நடிகர் சமீபத்தில் மனைவிக்கு தெரியாமலேயே லிப் லாக் காட்சி மற்றும் படு நெருக்கமான காட்சிகளில் அந்த நடிகையுடன் நடித்துள்ளதாகவும், அந்த நடிகையின் அழகில் இவர் டெம்ப்ட் ஆகி விட்டார் என்றே வெடிகுண்டை தூக்கிப் போட்டுள்ளனர்.

Popular actor tempted with bikini actress makes his wife angry?

ஷிஃப்ட் ஆனதே அதுக்குத்தானா?: கன்ட்ரோலில் இருந்தவரை கட்டுக்கோப்பாக கட்டுப்பாட்டுடன் இருந்து வந்த அந்த பிரைட் நடிகர் சமீபத்தில் வேறு இடத்துக்கு ஷிஃப்ட் ஆக காரணமே அந்த நடிகை தான் என்றும் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக என்று சொன்னதெல்லாம் சும்மா பேச்சுக்கு என்றும் கொளுத்திப் போட்டு வருகின்றனர்.

எது உண்மை: ஆனால், இதெல்லாம் உண்மை கிடையாது என்றும் சமீபத்தில் அந்த நடிகையுடன் படத்துக்காக அப்படியொரு முத்தக் காட்சியில் அந்த பிரைட் நடிகர் நடித்த நிலையில், மனைவி அவர் மீது கோபமாக இருக்கிறார் என்றும் அதனால், இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நடிகையுடன் நடிகர் தொடர்பில் இருக்கிறார் என பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் இன்னொரு தரப்பு கூறி வருகிறது. இதில், எது உண்மை? எது பொய்? என்பது கூடிய விரைவிலேயே தெரிந்து விடும் என்கின்றனர்.

English summary

Popular actor tempted with bikini actress makes his wife angry gossips trending in Kollywood: மனைவியை மறந்து விட்டு பிகினி நடிகையுடன் பிரைட் நடிகர் நெருக்கமாக பழகி வருவதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

Story first published: Saturday, May 20, 2023, 13:10 [IST]