Gossips
oi-Mari S
By Staff
|
சென்னை: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ஏகப்பட்ட கனவுகளுடன் வந்த அந்த இளம் நடிகை தற்போது பிரைவேட் பார்ட்டிகளில் அதிகம் காணப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.
பாண்டிச்சேரியில் நடக்கும் நைட் பார்ட்டிகளில் அடிக்கடி அந்த நடிகை தென்பட்டு வரும் நிலையில், அவர் குறித்த ஷாக்கிங் தகவல்கள் தற்போது வெளியாகி கோடம்பாக்கத்தையே அதிர வைத்திருக்கிறது.
பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காமல் தவித்து வரும் அந்த நடிகை செம ஹேப்பியாகவும் சொகுசு வாழ்க்கையை எப்படி வாழ்கிறார் என்கிற கேள்விகளுக்கு தற்போது விடை கிடைத்திருப்பதாக பலரும் பேசத் தொடங்கி உள்ளனர்.
ரியாலிட்டி ஷோ நடிகை: அந்த பெரிய ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட அந்த நடிகைக்கு அதற்கு பிறகு பல பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிடைத்த ஒரு சில படங்களை தவிர்த்து பெரிதாக எதுவுமே அமையவில்லை.
கிடைத்த ஒரு சில படங்களும் சொதப்பிய நிலையில், புதிதாக அந்த ஹீரோயினை சினிமாவில் புக் செய்யவே பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பயந்து வருகின்றனர்.
ஆடம்பர வாழ்க்கை: பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், அந்த கவர்ச்சி நடிகை ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகிறாரே எப்படி என்கிற கேள்வி ரசிகர்களை விட சினிமா பிரபலங்கள் மத்தியிலேயே அதிகம் எழுந்து வந்தது.
சின்ன ரோலில் நடித்து வரும் நடிகை எப்படி ஸ்டார் ரேஞ்சுக்கு ஆட்டம் போட்டு வருகிறாரே இதற்கு பின்னணியில் என்ன நடக்கிறது என நோட்டம் போட்டவர்களுக்கு அவர் எப்படி சொகுசு வாழ்க்கையை வாழ்கிறார் என்கிற அதிர்ச்சியான தகவல்கள் தெரிந்துள்ளதாம்.
பாண்டிச்சேரி பார்ட்டிகளில்: அந்த இளம் கவர்ச்சி நடிகை அடிக்கடி பாண்டிச்சேரியில் நடக்கும் இரவு நேர பிரைவேட் பார்ட்டிகளுக்குச் சென்று வருவதாகவும், பெரிய தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுடன் ஜாலியாக இரவு பொழுதை கழித்து வருவதாகவும் கூறுகின்றனர்.
லட்சக் கணக்கில் சம்பளம்: ஷூட்டிங்கிற்கே போகாமல் படங்களில் ஏதும் பெரிதாக நடிக்காமல் இருந்தாலும், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, சொகுசு கார்களை வாங்குவது என ஆர்ப்பாட்டம் செய்ய காரணமே பிரைவேட் பார்ட்டிகளில் லட்சக் கணக்கில் அவர் சம்பாதித்து வருவது தான் காரணம் என்கின்றனர்.
சில பிரபலங்களுடன் சேர்ந்துக் கொண்டு வெளிநாடுகளுக்கும் சென்று அங்குள்ள ஹோட்டல்களிலும் கும்மாளம் போட்டு வருகிறாராம் அந்த நடிகை என பல அதிர்ச்சி தகவல்கள் கோடம்பாக்கத்தில் புகையத் தொடங்கி உள்ளன.
English summary
Young glam actress earns more money in private parties: பிரைவேட் பார்ட்டிகள் மூலமாக பல லட்சங்களை அந்த இளம் கவர்ச்சி நடிகை சம்பாதித்து வருவதாக ஷாக்கிங் தகவல்கள் லீக் ஆகி உள்ளன.
Story first published: Saturday, May 6, 2023, 13:23 [IST]