சரக்கு தீர்ந்துடுச்சு

சரக்கு தீர்ந்துடுச்சு

ஆரம்பத்தில் சினிமாவுக்குள் நுழையும் வேகத்தில் சின்ன பட்ஜெட்டில் சிறந்த இயக்கத்தை வெளிப்படுத்திய அந்த கருத்து கந்தசாமி அதன் பின்னர் டாப் நடிகருடன் சேர்ந்து படம் பண்ண ஆரம்பித்ததும் அவரது ஒட்டுமொத்த சரக்கும் தீர்ந்துடுச்சு என அவர் கூட இருக்கும் உதவி இயக்குநர்களே கிண்டல் செய்யும் அளவுக்கு வரிசையாக சொதப்பி வருகிறார்.

இதுவரை சேஃப்

இதுவரை சேஃப்

எப்படி படம் எடுத்தாலும் நல்ல மனசு இருந்தால் போதும், நல்லா பேசினாலே அந்த டாப் நடிகர் நம்பிக்கையுடன் தோற்றாலும் அடுத்தடுத்த வாய்ப்புகளை கொடுப்பார் என்பதை புரிந்து கொண்டு அவரது தலையிலேயே மசாலா அரைக்க ஆரம்பித்து விட்டார் அந்த இயக்குநர். ஒன்றுக்கு பல முறை வாய்ப்புகள் கொடுத்த நிலையில், இனிமேலும் தாங்க முடியாது சாமி நீங்க வேற ஆளை பார்த்துக்கோங்க என அந்த டாப் நடிகரும் கடையை காலி பண்ண சொல்லிட்டாராம்.

செம சொகுசு

செம சொகுசு

டாப் நடிகருடன் படம் பண்ணும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அப்படியே சொகுசாக பல ஆண்டுகளை சினிமாவில் கடத்தி விட்டு டாப் இயக்குநர் என்கிற பெயரையும் வாங்கிக் கொண்டு இருந்த அந்த இயக்குநர் அதெ பெயருடன் அடுத்த பெரிய நடிகரை பிடித்து விடலாம் என பக்காவாக பிளான் செய்து படம் வெளியாவதற்கு முன்னதாகவே பெரிய பில்டப் பண்ணி பாஸ் நடிகரை இயக்க ஓகே வாங்கி விட்டார்.

சிக்கிய பாஸ் நடிகர்

சிக்கிய பாஸ் நடிகர்

தம்பி நல்லா கருத்தா படம் பண்றாப்ள நமக்கும் ஒரு கதை இருக்குன்னு சொல்றாரு அடுத்து இவருடன் பணியாற்றி இன்னொரு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கலாம் என நினைத்த அந்த பாஸ் நடிகர் இயக்குநர் விரித்த வலையில் சரியாக சிக்கி விட்டார் என பேச்சுக்கள் அடிபட்டு வந்தன.

கடுப்பான நடிகர்

கடுப்பான நடிகர்

ஆனால், படத்தை பார்த்து விட்டு பயங்கர கடுப்பாகி விட்டாராம் அந்த பாஸ் நடிகர். இப்படியொரு லாஜிக்னா என்ன விலை என கேட்கும் அளவுக்கு படத்தை எடுத்து விட்டுத் தான் என்னை வைத்து இயக்க நினைத்தாரா அந்த இயக்குநர் என எண்ணிய அந்த நடிகர் அந்த தம்பியை இனிமேல் ஆபிஸ் பக்கம் வர வேண்டாம்னு சொல்லுங்க.. போன் பண்ணா நான் பிஸியா இருக்கேன்னு சொல்லிடுங்க என சொல்லி இருப்பதாக பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

தயாரிப்பாளர் கோபம்

தயாரிப்பாளர் கோபம்

ஒவ்வொரு படம் தோல்வி அடையும் போதும் மற்றவர்கள் மீதே அந்த இயக்குநர் குறை சொல்லிக் கொண்டு எஸ்கேப் ஆகி வந்த நிலையில், இந்த முறையும் அதே வேலையை பண்ணி பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திட்டாரே என தொடர்ந்து அந்த இயக்குநரை நம்பி படம் போட்ட அந்த தயாரிப்பாளர் போங்கடா நான் ராஜஸ்தானுக்கே போறேன் என பெட்டியை தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டாராம்.