Gossips
oi-Mari S
By Staff
|
சென்னை: நைட் படத்தில் நிர்வாணமாக நடித்த இளம் நடிகைக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளே கிடைக்காமல் போன நிலையில், ரொம்பவே கஷ்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகைக்கு திடீரென லீடு ரோல் கிடைத்ததும் எல்லாத்துக்கும் ஓகே என சொல்லி நடிக்க ஒப்புக் கொண்டார்.
ஆனால் அந்த படத்தில் அப்படியொரு காட்சியில் நடித்த பின்னர் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவியும் என இயக்குநரின் பேச்சை நம்பி மோசம் போய்விட்டதாக சமீபத்தில் தனது நெருங்கிய வட்டத்தில் நடிகை இதுபற்றி பேசி அழுது புலம்பி உள்ளாராம்.
இயக்குநர் பேச்சால் ஏமாந்த நடிகை: இது வேறலெவல் சாதனை படமாக வரப்போகுது. இந்த படத்துக்கு பிறகு உன் ரேஞ்சே மாறப்போகுது என ஏகப்பட்ட ஆசை வார்த்தைகளை காட்டி அந்த இளம் நடிகையை பிரைன் வாஷ் செய்து நன்றாக ஏமாற்றிவிட்டாராம் அந்த இயக்குநர்.
பெற்றோர்கள் எவ்வளவோ தலையால் அடித்துக் கொண்டும் யார் பேச்சையும் மதிக்காமல் அந்த இயக்குநரின் பேச்சை நம்பி அந்த படத்தில் வயதுக்கு மீறிய ரோலில் நடித்திருந்தார் அந்த நைட் நடிகை.
ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வாணமாக: அந்த படத்தில் ஆரம்பத்தில் இப்படியொரு காட்சி இருப்பதையே மறைத்து விட்ட அந்த இயக்குநர் கடைசியில் நடிகையை இந்த காட்சியில் நடிக்க கட்டாயப்படுத்தி நடிக்க வைத்து விட்டதாகவும் நடிகையும் படத்திற்காக வேறு வழியில்லாமல் அதில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் கூறுகின்றனர்.
ஆனால், அந்த படம் வெளியான பிறகு எதிர்பார்த்த அளவுக்கு ஓடாமல் கடுமையான விமர்சனங்களால் படம் டோட்டல் வாஷ் அவுட் ஆகி விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டன.
மேலும், பெரிதாக பாராட்டுக்களும் அந்த படத்திற்கு கிடைக்காத நிலையில், அந்த படத்தில் அப்படியொரு ஆபாச காட்சியில் நடித்த அந்த நடிகைக்கு எந்தவொரு புதிய படத்திலும் வாய்ப்புகளே வராமல் போய் விட்டன.
நடுரோட்டுக்கு வந்த நடிகை: பட வாய்ப்புகள் கிடைக்காமல் தற்போது ரொம்பவே நடிகை கஷ்டப்பட்டு வருவதாகவும், பட வாய்ப்புகள் யாராவது கொடுத்தாலும், அதே போன்று நிர்வாணக் காட்சிகள் இருக்கின்றன நடிக்கிறீங்களா எனக் கேட்டு நடிகையை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துகின்றனராம்.
இந்நிலையில், புதிய பட வாய்ப்புகளை பெற நடுரோட்டுக்கு வந்து வித விதமாக போட்டோஷூட்களை நடத்தி நடிகை பதிவிட்டு வாய்ப்புகளை தேடி வருவதாகவும் ஆனால், எந்தவொரு வாய்ப்பும் கிடைக்கவில்லை என தனது நெருங்கிய வட்டாரத்தில் நடிகை அழுது புலம்பி உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
English summary
Description: Actress loses her new movie chances due to acting nude in a movie: நிர்வாணமாக நடித்த நிலையில், புதிய படங்களில் வாய்ப்புகள் வராமல் குறைந்து விட்டதாக நடிகை புலம்பி உள்ளார்.
Story first published: Thursday, April 27, 2023, 6:40 [IST]