Gossips
oi-Mari S
By Staff
|
சென்னை: நடிகர்கள் தன்னை அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு அழைத்தனர், படுக்கைக்கு அழைத்தனர் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சொன்னாலும் ஒருத்தரும் அந்த நடிகையின் பேச்சை மதிக்காமல் இருந்த நிலையில், நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை கிளப்பினார்.
அரை நிர்வாணமாக போராட்டம் பண்ணுகிறேன் என்கிற பெயரிலும் ஸ்கின் டிரெஸ்ஸை அணிந்து கொண்டு ஏமாற்றிய அந்த நடிகை சமீப காலமாக செம சைலன்ட்டாக இருக்காரே அதற்கு என்ன காரணம் தெரியுமா? என ஒரு பரபரப்பு தகவல் சினிமா வட்டாரத்தில் கசிந்துள்ளது.
வாய்ப்புக்காக வளைந்து கொடுக்க நினைத்த அந்த நடிகை எல்லாம் முடிந்த பின்னர், நடிகர்கள் எந்தவொரு சான்ஸும் தராத நிலையில் தான் அப்படி டென்ஷனாகி வாய் விட ஆரம்பித்தார்.
நடிகர்கள் மீது அந்த புகார்: தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள் தன்னை பயன்படுத்திக் கொண்டு பட வாய்ப்புகளை வழங்கவே இல்லை என அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்தார் அந்த நடிகை.
படுக்கைக்கு அழைத்த நடிகர்களையும் தன்னுடன் படுத்த நடிகர்களையும் பட்டியலிட்டு அந்த நடிகை சொன்ன நிலையிலும், அவர் சொன்ன புகாரில் எந்தவொரு முகாந்திரமும் இல்லை என சினிமா இயக்கங்கள் அவரை கண்டு கொள்ளவே இல்லை.
அமைதியோ அமைதி: அந்த அளவுக்கு ஆர்ப்பாட்டம் பண்ணி அனைத்து நடிகர்களின் லீலைகளையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த போகிறேன் என அடம்பிடித்து வந்த அந்த நடிகை சில ஆண்டுகளாக இப்படியொரு அமைதியை கடைபிடிப்பது எப்படி என்றும் சினிமா வாய்ப்புகள் இல்லாத நிலையிலும் சொகுசு வாழ்க்கை அவர் எப்படி வாழ்ந்து வருகிறார் என்கிற கேள்விகளும் சினிமா வட்டாரத்தில் கிளம்பி வந்த நிலையில், அதற்கான பரபரப்பு காரணங்கள் தற்போது கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
அதுதான் காரணமா?: நடிகை இப்படி சைலன்ட்டாக தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பதற்கு பின்னணியில் அந்த பிரபல நடிகர் பண்ண வேலை தான் காரணமாம். சினிமா வாய்ப்பு கொடுத்தாலும், நடிக்கத் தெரியாத அந்த நடிகைக்கு என்ன தான் பண்ணி அவரை ஆஃப் செய்வது என நினைத்த அந்த நடிகர் தன் பெயர் தேவையில்லாமல் கெட்டு விடக் கூடாது என்பதற்காக சில லட்சங்களை கொடுத்து சைலன்ட் ஆக்கி விட்டார் என அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.
English summary
Actress who accuused several actress in casting couch issue now remained silent due to this reason: பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கின்றனர் ஹீரோக்கள் என பகீரை கிளப்பிய நடிகை அமைதியாக இருக்க காரணம் அது தான் என தகவல்கள் கசிந்துள்ளன.