Gossips
oi-Mari S
By Staff
|
சென்னை: திருமணம் செய்துக் கொண்ட பின்னரும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் அந்த பிரபல நடிகை சமீப காலமாக தனது கணவருடன் பேச்சுவார்த்தையே இல்லாமல் வாழ்ந்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.
புசுபுவென இருந்து வந்த பப்ளி நடிகை சமீபத்தில் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், திருமணம் ஆகி சில மாதங்களே ஆகும் நிலையில், திருமண வாழ்க்கை அவர் நினைத்தபடி இல்லை எனக் கூறுகின்றனர்.
ஆரம்பத்தில் கணவருடன் அத்தனை போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த நடிகை சமீப காலமாக சோலோ மோடிலேயே செயல்பட்டு வருகிறார் என பேச்சுக்கள் பலமாக எழுந்துள்ளன.
இரண்டாம் தாரம்: காதலருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனது தெரிந்தும் அவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் அந்த பப்ளி நடிகை. திருமண வாழ்க்கை தனக்கு இவருடன் செட்டாகும் என நினைத்து இரண்டாம் தாரமாக திருமணம் செய்துக் கொள்ளவும் சம்மதித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோலாகலமாக நடைபெற்ற திருமணம் தற்போது கசப்பு மாத்திரையாக ஆகி விட்டதாக நடிகை கவலையில் ஆழ்ந்துள்ளாராம்.
இருவருக்கும் சண்டை: திருமணத்துக்கு பிறகும் நடித்து வரும் நடிகைக்கும் அவரது கணவருக்கும் இடையே திருமணம் ஆகி 3 மாதங்களிலேயே மன வருத்தம் ஏற்பட்டு பெரிய சண்டையே வெடித்து விட்டதாம்.
கடந்த சில மாதங்களாகவே சண்டை காரணமாக இருவரும் ஒருவருக்கொருவர் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வருவதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சந்தேகப்பட்ட கணவர்: திருமணத்துக்கு பின்னரும் பிரபல நடிகை சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். ஆனால், தயாரிப்பாளருக்கும் நடிகைக்கும் இடையே கனெக்ஷன் ஒன்று ஓடிக் கொண்டிருப்பதாக கிளம்பிய வதந்திகள் காரணமாக நடிகையிடம் சந்தேகப்பட்டு காதல் கணவர் கேள்வி கேட்டது தான் இருவருக்கும் இடையே இப்படியொரு பெரிய சண்டை வெடிக்க காரணம் என்கின்றனர்.
கூடிய சீக்கிரமே கணவரை நடிகை பிரிந்து விடுவார் என்றும் கணவரை நடிகை டோட்டலாக அவாய்டு பண்ணி விட்டார் என்றும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கிளப்பி உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அந்த நடிகை வீட்டுக்கே செல்வதில்லையாம். ஷூட்டிங் ஸ்பாட் அருகே உள்ள ஹோட்டலில் தனி அறையை எடுத்துக் கொண்டு சோலோவாகவே தங்கி வருகிறார் என்கின்றனர்.
English summary
Bubbly Actress fight with her latest married hubby buzz shocks cinema industry: கணவருடன் பிரபல நடிகை சண்டை, சில மாதங்களாகவே பேச்சுவார்த்தை இல்லையாம்.
Story first published: Wednesday, June 14, 2023, 11:00 [IST]