bredcrumb

Gossips

oi-Mari S

By Staff

|

சென்னை: நம்பர் நடிகை தனது கணவருடன் அந்த விருது விழா நிகழ்ச்சிக்கு செல்லாத நிலையில், சமீபத்தில் தனது பழைய காதலரை ரகசியமாக சந்தித்து இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

இன்னமும் திருமணம் செய்யாமல் சுற்றி வரும் அந்த வம்பு நடிகரை திடீரென மீட் செய்ய வேண்டும் என நடிகை போன் பண்ணதில் இருந்து அவர் ரொம்பவே பதற்றம் ஆகி விட்டார் என்கின்றனர்.

கணவர் இல்லாத நேரம் பார்த்து அப்படி திடீரென வம்பு நடிகரை நம்பர் நடிகை என்ன காரணத்திற்காக சந்தித்தார் என்பது தான் செம ஷாக்கிங்கான விஷயம் என கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

Popular actress meets her ex lover for a big reason?

ஹீரோயின் தேடும் வம்பு நடிகர்: பெரிய பட்ஜெட் படத்தில் முதன்முறையாக கமிட் ஆகி உள்ள அந்த வம்பு நடிகர் பாலிவுட் வரை சென்று ஹீரோயின் வேட்டை நடத்தி வருகிறாராம்.

ஆனால், சமீபத்தில் அந்த நடிகர் அப்ரோச் செய்த பெரிய நடிகை இந்த நடிகருடன் எல்லாம் நடிக்க முடியாது என நோஸ் கட் செய்து அனுப்பி விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டன. இன்னமும் அந்த நடிகருக்கு ஹீரோயின் கிடைக்கவில்லை என்கிற தகவல் நம்பர் நடிகையின் காதுகளுக்கு எட்டிய நிலையில் தான் அப்படியொரு சந்திப்பு நடந்துள்ளதாக கூறுகின்றனர்.

பழைய காதலரை சந்தித்த நம்பர் நடிகை: பெரிய நடிகர்கள் படங்களில் எப்படியாவது கோலிவுட்டில் மீண்டும் நடித்து தான் விட்ட முதல் இடத்தை பிடித்து விட வேண்டும் என வெறியுடன் உள்ளாராம் நம்பர் நடிகை.

ஏற்கனவே ஒரு முறை பிரேக்கப்பிற்கு பிறகு கூட தனது பழைய பாய் ஃபிரெண்ட் உடன் ஒரு படத்தில் நடித்த நிலையில், தொழில் ரீதியாக இன்னொரு படத்தில் நடித்து விடலாம் என்கிற நினைப்புடன் நேரடியாக சந்தித்தே பேசி விட்டார் நம்பர் நடிகை என ரகசிய தகவல்கள் கசிந்துள்ளன.

தவிக்கும் வம்பு நடிகர்: நம்பர் நடிகை இதுவரை கேட்டு எதற்குமே முடியாது என்று சொல்லி பழகாத வம்பு நடிகர் இந்த முறை பவர்ஃபுல்லான ஹீரோயின் கதாபாத்திரம் என்பதை அறிந்து கொண்டு மீண்டும் தன்னுடன் நடிக்க நடிகை பேச்சுவார்த்தை நடத்துவதை பார்த்து ஷாக்கான வம்பு நடிகர் அவருக்கு உடனடியாக யெஸ் சொல்ல முடியாமல் தவித்து வருவதாக கூறுகின்றனர்.

Popular actress meets her ex lover for a big reason?

என்ன சிக்கல்?: ஏற்கனவே பாஸ் நடிகரின் படத்தில் நடிக்க நம்பர் நடிகை இயக்குநர் மூலமாக நகர்த்திய காய்க்கு நடிகர் முடியவே முடியாது என செக்மேட் வைத்த நிலையில் அவர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்துக்கு மட்டும் நம்பர் நடிகையை நடிக்க வைக்க எப்படி ஓகே சொல்வார் என்கிற யோசனை சட்டென வந்த நிலையில் தான் வம்பு நடிகர் எந்தவொரு முடிவையும் சொல்லாமல் புலம்பித் தவித்து வருகிறாராம்.

பாஸ் நடிகர் தன்னை நம்பி பெரிய படத்தை கொடுத்துள்ள நிலையில், அவரிடம் இப்படியொரு கோரிக்கையை கொண்டு போனால் நல்லா இருக்குமா? சம்மதம் சொல்வாரா? மாட்டாரா என்கிற குழப்பத்திலேயே வேறு சில ஆட்கள் மூலமாக இந்த விஷயத்தை பாஸ் நடிகரின் காதுகளுக்கு கொண்டு செல்ல வம்பு நடிகர் திட்டமிட்டு இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

விரைவில், ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியானால் தான் இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு வரும் என்றும் கூறுகின்றனர்.

English summary

Popular actress meets her ex lover for a big reason: பழைய காதலரை சந்தித்து சமீபத்தில் நம்பர் நடிகை பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் கசிந்துள்ளன.