Gossips
oi-Mari S
By Staff
|
சென்னை: வார வாரம் அந்த வி நடிகர் தான் படங்களை ரிலீஸ் செய்து தியேட்டர் ஓனர்களையும் தயாரிப்பாளர்களையும் போண்டியாக்கி வந்தார் என்று பார்த்தால் அவருக்கு செம டஃப் போட்டி கொடுக்கும் வகையில் தற்போது அந்த ஜில் நடிகையும் களத்தில் குதித்துள்ளாராம்.
எப்படி நடித்தாலும் ஒரு படம் கூட ஒரு நாள் கூட ஹவுஸ்ஃபுல் காட்சியாக ஓடவில்லை என்றாலும் தொடர்ந்து நடித்து தொல்லை கொடுத்து வருகிறாராம் அந்த ஜில் நடிகை.
கொஞ்சம் பிரேக் விட்டு நல்ல படங்களை தேர்வு செய்து நடித்தால் தான் பெரிய இடத்தை பிடிக்க முடியும் என சினிமா நண்பர்கள் எடுத்துச் சொன்னாலும், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என தத்துவம் பேசி வருகிறாராம் அந்த நடிகை.
பிரேக்கில்லாமல் ஷூட்டிங்: ஒரு சில நடிகர்கள் மட்டும் தான் சினிமாவுக்கு உண்மையாக இருப்பார்கள். ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டே ஃபாரீன் டூர் சென்று விடும் நடிகைகளுக்கு மத்தியில் பிரேக்கே இல்லாமல் தொடர்ந்து நடித்து தள்ளி வருகிறார் அந்த ஜில் நடிகை.
எப்படி இவரால் மட்டும் ஒரு வருஷத்தில் ஒரு டஜன் படங்களில் நடிக்க முடிகிறது என சக நடிகைகளே ஷாக் ஆகி பார்க்கும் அளவுக்கு ஒரேயடியாக ஓயாமல் நடித்து வருகிறார் அந்த நடிகை.
மாஸ்டர் பிளான்: ஒரு படத்துக்கு பெரிய சம்பளத்தை வாங்கிக் கொண்டு வருஷத்துக்கு ஒரு படம் பண்ணாமல் குறைவான சம்பளத்தை வாங்கிக் கொண்டு வருஷத்துக்கு 10 படம் நடித்தால், மற்ற நடிகைகளை விட தனது சம்பளம் அதிகமாக இருக்கும் என மாஸ்டர் பிளான் போட்டு கால்ஷீட் கேட்கும் இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தாராளமாக கால்ஷீட் கொடுத்து நடித்துக் கொடுத்து வருகிறார் அந்த நடிகை.
ஒண்ணுமே ஓடல: ஆனால், நடிகை என்ன தான் மூச்சை பிடித்துக் கொண்டு நடித்தாலும் அவர் நடிக்கும் ஒரு படமும் ஓடுவதில்லை. நடிகை போட்ட மாஸ்டர் பிளான் தற்போது அவருக்கே ரிவீட் அடிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது என்கின்றனர்.
தொடர்ந்து படங்கள் படு தோல்வியை சந்தித்தால் அதன் பின்னர், பட வாய்ப்புகளே இல்லாமல் போய் விடும் என நண்பர்கள் பலரும் எச்சரித்து வந்தாலும், வர வரைக்கும் லாபம் என நடித்து வரும் அந்த நடிகையின் நடிப்பில் இந்த வாரமும் ஒரு படம் ரிலீஸ் ஆக காத்திருக்கிறதாம்.
தியேட்டர் ஓனர்கள் தப்பி ஓட்டம்: சமீபத்தில், நடிகை நடிக்கும் புதிய படத்தை வாங்கிக் கொள்ள தயாரிப்பு தரப்பு தியேட்டர் ஓனர்களை அணுக, பல முன்னணி தியேட்டர்களும் அந்த நடிகையின் கடந்த படம் வசூலில் பெரும் சொதப்பல் சொதப்பிய நிலையில், இந்த படத்தை வாங்க தயக்கம் காட்டி தப்பி ஓடியே விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
அங்கே துரத்தி அடிச்சிட்டாங்க.. பழைய இடத்தை பிடிக்கத்தான் அந்த நடிகை பிட்டு பிட்டா போடுறாராம்!
English summary
Theater owners not showing interest to buy Talented actress upcoming movie: ஜில் நடிகை நடிக்கும் புதிய படத்தை வாங்க தியேட்டர் ஓனர்கள் ஆர்வம் காட்டவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Story first published: Thursday, May 25, 2023, 6:35 [IST]