Gossips
oi-Mari S
By Staff
|
சென்னை: இயக்குநர் கோரிக்கையை ஏற்று பெரிய மனதுடன் அந்த காமெடி நடிகருக்கு டைட்டில் கார்டு முதல் அனைத்து இடங்களிலும் முதல் இடத்தை அந்த பெரிய இடத்து வாரிசு கொடுத்திருந்தார்.
ஆனால், படம் வெளியான பின்னர், தனக்கான கிரெடிட் கிடைக்கும் என்றால், வளைத்து வளைத்து அந்த மூஞ்சியிலே ஏன் நடிப்பை வரல என மீம் போட்டே பலரும் ட்ரோல் செய்து வருவதால் வாரிசு கடுப்பாகிவிட்டார்.
ஒட்டுமொத்த ரசிகர்களையும் அந்த காமெடி நடிகர் எடுத்துக் கொண்ட நிலையில், படம் ரிலீஸுக்கு பிறகு அவரை எதற்குமே அழைக்காமல் ஹாஃப் செய்து விட்டாராம். இதனால், காமெடி நடிகர் மனதளவில் வருத்தத்தில் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
படத்தையே காப்பாற்றிய நடிகர்: இயக்குநரின் மனதில் இருந்த அத்தனை ஆதங்கத்தையும் படத்தில் தனது நடிப்பாலே வெளிப்படுத்தி ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து காப்பாற்றியதே அந்த காமெடி நடிகர் தான்.
அவர் இல்லையென்றால் இந்த படம் இந்தளவுக்கு ஓடியிருக்காது என்றும் அந்த வாரிசு நடிகருக்காக படத்தை பார்க்க யாரும் பெரிதளவில் தியேட்டர் பக்கமே வந்திருக்க மாட்டார்கள் என்றும் இந்த நடிகருக்காகத் தான் படமே ஓடியது என்றும் எல்லாருமே அவரை புகழ ஆரம்பித்ததும் வாரிசுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை என்கின்றனர்.
காமெடியை கழட்டி விட்ட வாரிசு: படம் ரிலீஸ் ஆன பிறகு எல்லாப் புகழும் அந்த காமெடி நடிகருக்கே சென்று விட்ட நிலையில், எந்தவொரு கிரெட்டிட்டும் இனி அவருக்கு சென்று விடக் கூடாது என அனைத்திலும் தானே இருக்க வேண்டும் என்றும் இந்த படம் தனக்கான படமாக மாற வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்த விஷயங்களில் சிலர் அறிவுறுத்தலின் பேரில் அந்த வாரிசு செய்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
காமெடி நடிகர் அப்செட்: படத்திற்கு பிறகு தனக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அதனை கொண்டாட நினைத்துக் கொண்டிருந்த நடிகருக்கு திடீரென பெரிய இடத்தில் இருந்து கண்டிஷன் போடப்பட்டு அவர் கழட்டிவிடப்பட்டதை அறிந்த காமெடி நடிகர் மனதளவில் ரொமப்வே அப்செட் ஆகி விட்டார் என ஒரே பேச்சாக புகைந்து வருகிறது.
தலைக்கு ஏறிய புகழ் போதை.. அடுத்த படத்திற்கு அப்படியொரு செக் வைத்த காமெடி நடிகர்.. என்ன மேட்டர்?
English summary
Gossips: Big Background actor avoids Comedy actor after he gets all the spotlight: காமெடி நடிகருக்கு ஒட்டுமொத்த புகழும் கிடைத்த நிலையில், படத்தின் ரிலீசுக்கு பிறகு அவரை ஓரங்கட்டிவிட்டார் அந்த பெரிய இடத்து வாரிசு என பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.
Story first published: Tuesday, July 4, 2023, 11:40 [IST]