bredcrumb

Gossips

oi-Mari S

By Staff

|

சென்னை: மாஸ் நடிகர் தனது படங்களில் தொடர்ந்து அரசியலை புகுத்தி வரும் நிலையில், அடுத்த படத்தில் வெயிட்டான அரசியல் கதையில் நடிக்க முடிவு செய்துள்ளார் என பரபரப்பான தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

அந்த பிரம்மாண்ட இயக்குநரிடமே அப்படியொரு கதையை எதிர்பார்த்த நிலையில், எதுவும் செட் ஆகாததால் தான் அந்த காப்பி இயக்குநரின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.

Popular actor directly attacks a political party in his next movie?

நோலன் இயக்குநர் இயக்கத்திலும் அரசியலை அதிகம் பயன்படுத்திய நடிகர் இம்முறை ஒன்றிய அரசையே எதிர்க்கும் அளவுக்கு செம ஸ்ட்ராங்கான மெசேஜ் உடன் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக கூறுகின்றனர்.

அரசியல் ஆசை எப்பவோ வந்தாச்சு: முன்னணி நடிகராக வலம் வரும் அந்த மாஸ் ஹீரோவுக்கு மனதில் எப்படியாவது மிகப்பெரிய அரசியல் கட்சியை ஆரம்பித்து பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசை ஆழமாக பதிந்து விட்டது.

அந்த நடிகர் போல தனது மகனையும் பெரிய நடிகராக மாற்றிய நிலையில், அரசியலிலும் ஈடுபடுத்த வேண்டும் என அப்பா ஆசைப்பட்டது மட்டுமின்றி அவசரப்பட்டது தான் இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடிக்க காரணம் என்கின்றனர்.

விரைவில் அரசியல் என்ட்ரி: அரசியல் என்பது சாதாரண விஷயம் இல்லை. அதிரடியாக இறங்கி நொடிப் பொழுதில் தோல்வியை தழுவிக் காணாமல் போய் விட்டால் அசிங்கமாக போய் விடும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கும் அந்த நடிகர் கொஞ்சம் கொஞ்சமாக அதற்காக தன்னையும் தனது ரசிகர்களையும் தயார்ப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் அதிரடியாக அரசியலில் நுழையப் போகிறார் அந்த மாஸ் ஹீரோ என்கிற டாப் சீக்ரெட் தகவல்கள் கோடம்பாக்கம் முதல் கோட்டை வரை உலுக்கி வருகிறது.

நடிகரை கட்டுப்படுத்த: உச்ச நடிகர் அரசியலை விட்டு ஒதுங்கிய நிலையில், மாஸ் நடிகரின் வருகை ரசிகர்களை மொத்தமாக அவரது பக்கம் திருப்பி விடும் என்பதால் தான் ஆளுங்கட்சிக்கு நெருக்கமான நிறுவனம் தொடர்ந்து அந்த நடிகரின் படங்கள் சொதப்பினாலும், அடுத்தடுத்து பல கோடி கொடுத்து நடிகரை வைத்தே படம் செய்து வந்து அவரை ஆஃப் செய்து வருவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

Popular actor directly attacks a political party in his next movie?

பிரில்லியன்ட் மூவ்: அந்த நடிகரும் அந்த விவகாரம் எல்லாம் புரிந்து இருப்பதால் தான் சமீப காலமாக ரொம்பவே அடக்கி வாசித்து வருகிறாராம். இந்நிலையில், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பிரில்லியன்ட் மூவாக ஒன்றிய அரசை எதிர்க்கும் முடிவை தீவிரமாக செயல்படுத்த நடிகர் முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்

அடுத்து அவர் நடிக்க உள்ள படம் முழுக்க முழுக்க அரசியலை சார்ந்து இருக்க வேண்டும் என இயக்குநருக்கு இப்பவே அட்வைஸ் செய்து விட்டாராம். அந்த படம் வெளியான பின்னர் அரசியல் என்ட்ரி கொடுக்கவும் திட்டம் என்பதால் பெரியளவில் படத்தின் தாக்கம் இருக்க வேண்டும் என ஏகப்பட்ட வேலைகளை தாராளமாக இயக்குநரை செய்யச் சொல்லி இருக்கிறார் என தகவல்கள் கசிந்துள்ளன.

இதுவரை அரசியல் கதையில் நடித்தாலும், ஒதுங்கி போகும் கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த அவர், இந்த முறை ஆழமான அரசியலையும் எதிர்ப்பு அரசியலையும் பேசும் நபராக நடிக்கப் போவதாக கூறுகின்றனர்.

English summary

Description: Popular actor directly attacks a political party in his next movie talks trending on cine industry: அடுத்த படத்தில் வெயிட்டான அரசியலை அந்த மாஸ் நடிகர் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Story first published: Thursday, April 20, 2023, 12:46 [IST]