bredcrumb

Gossips

oi-Mari S

By Staff

|

சென்னை: பெரிய பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கும் போது சைலன்ட்டாக எஸ்கேப் ஆகத்தானே எல்லாரும் நினைப்பாங்க, விவரம் தெரியாம அந்தம்மா ஏன் திடீரென வாயைக் கொடுத்து வான்ட்டட்டா வந்து வண்டியிலே ஏறுதுன்னு பார்த்தா அதற்கு பிறகு பெரிய தில்லாலங்கடி திட்டமே இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டவர்களுக்கு அதற்கு பிறகு பெரிதாக எந்தவொரு வாய்ப்புகளும் கிடைக்காத நிலை உருவாகி வருகிறது.

ஒரு சில படங்களில் சைடு ரோலில் தலை காட்டி வந்த அந்த முத்தின கத்தரிக்காய் நடிகைக்கு தற்போது சுத்தமாக படங்கள் எதுவுமே கிடைக்கவில்லை. இப்படியே போனால், நிலைமை என்ன ஆகும் என்பதை உணர்ந்து கொண்டு தான் அடுத்து என்ன செய்யலாம் என்கிற ஐடியாவை போட்டு வந்தவருக்கு சமீபத்திய சர்ச்சை மேட்டர் செம சான்ஸாக அமைந்து விட்டது என்கின்றனர்.

Actress gives sudden support to a big controversy issue due to this benefit?

வாய்ப்பே இல்லை:

அந்த பெரிய ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பிரபலம் அரசியலில் களமிறங்கி நல்லா சம்பாதித்துக் கொண்டு பின்னர், அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் கட்சிக்கு எதிராக பேசி வரும் நிலையில், அந்த இடம் இப்போ காலியாக இருப்பதை அறிந்து கொண்டு தான் இந்த நடிகை தற்போது இப்படியெல்லாம் பேசி வருகிறார் என பரபரப்பு பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

Actress gives sudden support to a big controversy issue due to this benefit?

சினிமாவில் என்ன சின்னத்திரையில் கூட பெரிதாக சமீப காலமாக அந்த நடிகைக்கு வாய்ப்புகள் சுத்தமாக வரவே இல்லையாம். எதையாவது செய்து சம்பாதிக்க வேண்டுமே என நினைத்துக் கொண்டிருந்த அந்த நடிகைக்கு செம ஜாக்பாட் அடித்தது போல அவர் சம்பந்தப்பட்ட இடத்திலேயே சர்ச்சை வெடித்த நிலையில், அதை வைத்தே சிக்சர் அடிக்க பார்த்து இருக்கிறார்.

அரசியலில் நுழைய:

பொதுவாகவே இது போன்ற விஷயங்களில் வாயைக் கொடுத்தால் தங்கள் பெயரும் சேர்ந்து கெடும் என்பதால் யாருமே அந்த பக்கமே தலையை வைத்து படுக்கமாட்டார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் எந்த பிரிவினருக்குத் தனது சப்போர்ட்டை கொடுக்கிறோம் என்பதை வைத்து அந்த பெரிய கட்சியில் ஒரு இடம் கிடைக்கும் அதன் மூலம் இனி பெத்த லாபத்தை பார்க்கலாம் என்கிற நோக்கத்துடன் தான் அந்த நடிகை இப்படியொரு காரியத்தை வான்டட்டாகவே செய்திருக்கிறார் என்றும் இதுக்கும் குரு பக்திக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை என்று கோடம்பாக்க டீ கடை பெஞ்சுகளில் பழைய பேப்பர் பஜ்ஜியுடன் இதையும் மென்றுக் கொண்டிருக்கின்றனர்.

English summary

Actress gives sudden support to a big controversy issue due to this benefit talks going on Kollywood: வான்டட்டா வாயைக் கொடுத்து அந்த நடிகை வண்டியில் ஏற காரணமே அரசியல் ஆதாயத்துக்காகத்தான் என்கின்றனர்.

Story first published: Saturday, April 8, 2023, 10:28 [IST]