Gossips
oi-Mari S
By Staff
|
சென்னை: தனது மகளை அந்த ஒல்லி நடிகருக்கு ஜோடியாக்க விடாமல் உஷாராக பார்த்துக் கொண்டு வருகிறார் அந்த தயாரிப்பாளர். ஆனால், இந்த விஷயம் தெரிந்த நடிகருக்கு ஈகோ எக்கச்சக்கமாக எகிறி விட்டதாக கூறுகின்றனர்.
ஒல்லி நடிகரின் அசாத்திய நடிப்பை பார்த்து அவர் வலையில் விழாத நடிகைகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அனைவரையும் எளிதில் கவர்ந்து விடும் ஆற்றல் கொண்டவர் அவர்.
தனது அடுத்த படத்தில் எப்படியாவது அந்த வாரிசு நடிகையை வளைத்துப் போடலாம் என நினைத்த நடிகருக்கு அவரது கனவு பலிக்காமலே போய் விட்டது.
மகளை காப்பாற்றும் தந்தை: அந்த ஒல்லி நடிகருடன் மட்டும் நடிக்க வேண்டாம் என தனது மகளை தயாரிப்பு தந்தை பத்திரமாக பாதுகாத்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அதன் காரணமாகவே தமிழில் படங்களை அந்த இளம் நடிகை தவிர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் குறி வச்சிட்டாரு: ஆனால், அந்த நடிகையை எப்படியாவது தனது படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்கிற முடிவில் அந்த ஒல்லி நடிகர் இருந்து வருவதாகவும், நேரடியாக நடிகையின் அப்பாவிடமே பேசியும் பலனளிக்காத சூழலில் நடிகையிடம் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தவும் தொடர்ந்து நடிகர் முயற்சித்து தோல்வியையே சந்தித்து வருகிறார் என்கின்றனர்.
எப்படியாவது கரெக்ட் பண்ணனும்: இந்நிலையில், நடிகர் வச்சக் குறியில் இருந்து தப்பித்துக் கொண்டே இருக்கும் அந்த நடிகையை எப்படியாவது தனது அடுத்த படத்திற்கு கரெக்ட் பண்ண வேண்டும் என முடிவு செய்த நடிகர் அதற்காக பக்கா பிளான் ஒன்றை வகுத்துள்ளார் என்கின்றனர்.
Baakiyalakshmi: பாக்கியாவின் காபிக்கு மயங்கிய கல்யாண வீட்டினர்.. அட கோபியும்தான்!
கோலிவுட்டில் இருந்து மீண்டும் பாலிவுட்டுக்கு அந்த நடிகர் சென்றதே அந்த நடிகையுடன் ஜோடி போட்டு நடிக்கத் தான் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றனர். இயக்குநர் மூலமாக அந்த நடிகையை தனது படத்தில் ஜோடியாக்க வேண்டும் என நடிகர் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. கூடிய விரைவில், அந்த படத்தில் நடிகை கமிட் ஆவாரா? இல்லையா? என்பது தெரிந்து விடும் என்றும் அந்த நடிகைக்கும் நடிகருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருப்பதாகவும் கூறுகின்றனர்.
English summary
Popular actor tries to commit heir actress for his next movie: அந்த இளம் நடிகையை தனது அடுத்த படத்தில் கமிட் செய்ய ஒல்லி நடிகர் பல திட்டங்களை போட்டு வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
Story first published: Wednesday, July 5, 2023, 15:32 [IST]