bredcrumb

Gossips

oi-Mari S

|

சென்னை: டாப் நடிகரின் நிலைமை தனக்கு என்றுமே வராது என நினைத்துக் கொண்டிருந்த மாஸ் நடிகருக்கு அடுத்த படத்திலேயே அந்த இயக்குநர் பிரச்சனை வந்து விட்டதாக கூறுகின்றனர்.

பெரிய பட்ஜெட்டில் எப்படியாவது அந்த காப்பி இயக்குநருடன் மீண்டும் கைகோர்த்து மெகா உருட்டு படத்தைக் கொடுத்து விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த நடிகரிடம் அண்ணே இன்னொரு இந்தி படம் இருக்கு வர கொஞ்சம் நேரம் ஆகும் என டைம் கேட்டு அந்த இயக்குநர் எஸ்கேப் ஆகி விட்டாராம்.

Mass actor confused over choosing his next movie director?

ஷூட்டிங்கை முடிச்சிட்டு வெளியேவும் டூர் சுத்த முடியாது. வீட்டிலேயும் சும்மா இருக்க முடியாதே என்கிற நினைப்பில் உடனடியாக ஒரு படத்தை பண்ண வேண்டும் என்கிற கட்டாயத்தில் டாப் நடிகர் சிக்கி உள்ளார்.

தயாரிப்பு நிறுவனம் தந்த இயக்குநர்: நேரடியாக மாஸ் நடிகரை ஃபேஸ் பண்ண முடியாமல் அந்த ஒரு பிரச்சனை காரணமாக பல ஆண்டுகளாக மறைந்திருந்த அந்த காமெடி இயக்குநர் தயாரிப்பு தரப்பு மூலமாக மாஸ் நடிகருக்கு கதை சொல்லி உள்ளார்.

வம்பு நடிகர் படத்தை பார்த்து விட்டு நல்லா இருக்கேன்னு யோசிச்சு தலையை ஆட்டிய மாஸ் நடிகரிடம் தற்போது அவரது அட்மின் புதிய படத்தை பார்த்து விட்டு அண்ணே இவர் நமக்கு வேண்டாம்ணே என எச்சரித்து இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அட்மின் எச்சரிக்கை: மாஸ் நடிகரின் எல்லா படங்கள் குறித்த டீலிங்கையும் அந்த அட்மின் தான் தொடர்ந்து பார்த்து வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் அந்த காமெடி இயக்குநரின் படங்கள் படு தோல்வியை சந்தித்து வரும் நிலையில் இப்போதைக்கு அவரிடம் மாஸ் நடிகரை இயக்கும் அளவுக்கு சரக்கு இருக்குமா என்கிற சந்தேகம் ஹெவியாக அடித்துள்ள நிலையில், நடிகரை அலர்ட் பண்ணியதாக கூறுகின்றனர்.

ஆனால், அதே சமயம் நீண்ட காலமாகவே அந்த இயக்குநருடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்கிற ஆசை மாஸ் நடிகருக்கு இருப்பதால், இந்த முறை முயற்சி பண்ணித்தான் பார்ப்போமே என்கிற முடிவிலும் இருப்பதாக பேச்சுக்கள் கசிந்துள்ளன.

சம்பளமா? சக்சஸா?: படத்தை கம்மி பட்ஜெட்டில் அந்த இயக்குநரை வைத்து தயாரித்து விடலாம் என்கிற கணக்கு போட்டுத் தான் அந்த இயக்குநரை தயாரிப்பு தரப்பு தேர்வு செய்துள்ளது.

மாஸ் நடிகருக்கு பெரிய சம்பளத்தை தூக்கிக் கொடுப்பதாக சொன்ன நிலையில், சம்பளத்தை பார்க்கலாமா? இல்லை சக்சஸ் வேண்டும் என்பதற்காக இயக்குநரை மாற்றலாமா? என்கிற குழப்பத்தில் நடிகர் உள்ளாராம். மேலும், தற்போது நடிகருக்கு வேறு சில காரணங்களுக்காக பணத்தேவையும் இருப்பதால் ஓகே சொல்லிவிடுவார் என்றே கூறுகின்றனர். ஆனால், அதற்குள் வேறு ஏதாவது தயாரிப்பு நிறுவனம் வெயிட்டான இயக்குநருடன் வந்தால் மனம் மாறவும் வாய்ப்பு இருக்காம்!

English summary

Mass actor confused over choosing his next movie director: அந்த காமெடி இயக்குநருடன் கைகோர்க்க வேண்டாம் என மாஸ் நடிகரை அவரது அட்மின் எச்சரித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன்.

Story first published: Wednesday, May 17, 2023, 8:14 [IST]