காதலனை கரம்பிடித்தார் அமலாபால்... வைரலாகும் திருமண புகைப்படங்கள்...!

நடிகை அமலாபாலின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொச்சி,

மைனா, வேட்டை, தலைவா, வேலையில்லா பட்டதாரி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலாபால். சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோது 2014-ல் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

பின்னர் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு படங்களில் அமலாபால் கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார். அதன் உச்சமாக ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தார். இவர் தமிழில் கடைசியாக நடித்த ‘கடாவர்’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது, 3 மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாபாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரின் நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய் தனது காதலை வெளிப்படுத்தினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அமலாபால் முத்தம் கொடுத்து காதலை ஏற்றுக்கொண்டார். அந்த வீடியோ வைரலானது.

இந்நிலையில் ஜகத் தேசாயை அமலாபால் திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவரின் திருமணம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல தனியார் ரெசார்ட்டில் நடைபெற்றுள்ளது. அதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜகத் தேசாய், ‘இரண்டு ஆன்மாக்கள், ஒரு விதி, என் தெய்வீகப் பெண்ணுடன் இந்த வாழ்நாள் முழுவதும் கைகோர்த்து நடப்பேன்…’ என பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Jagat Desai (@j_desaii)

மேலும் சில புகைப்படங்களை பகிர்ந்த நடிகை அமலாபால், ‘எங்களை ஒன்றிணைத்த அன்பையும் அருளையும் கொண்டாடுகிறோம்… என் தெய்வீக ஆண்மையுடன் திருமணம் செய்துகொண்டேன்… உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறேன்..’ என பதிவிட்டுள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இவர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Amala Paul (@amalapaul)