கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியானது..!

கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளிவந்த கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கவின். அதன்பின்னர், சரவணன் மீனாட்சி மற்றும் தாயுமானவன் போன்ற பிரபல தொடர்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றார். 2017-ம் ஆண்டில் சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்து, முதன்முறையாக பெரிய திரையிலும் அறிமுகம் ஆனார்.

அதற்கு அடுத்த ஆண்டில் நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற காமெடி படத்தில் நாயகனாக நடித்து பிரபல நடிகரானார். நடப்பு ஆண்டில் கவின் நடிப்பில் வெளிவந்த ‘டாடா’ திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. பாக்ஸ் ஆபீசிலும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், நடிகர் கவின் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி கவின் நடிக்கும் புதிய படத்தை ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தை இயக்கிய எலன் இயக்குகிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்விசிசி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று (28.08.2023) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது.