கமல் படத்தில் ரூ.230 கோடிக்கு கிராபிக்ஸ்

கமல்ஹாசன் நடிப்பில் பான் இந்தியா படமாக பிரமாண்டமாக உருவாக உள்ள ‘கல்கி 2898 ஏடி’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே ஆகியோரும் நடிக்கின்றனர். கமல்ஹாசன் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. நாக் அஸ்வின் டைரக்டு செய்கிறார். அறிவியல் கதையம்சத்தில் படத்தை எடுக்கின்றனர்.

இந்த படம் ரூ.600 கோடி செலவில் தயாராகிறது. இந்த தொகையில் கிராபிக்ஸ் பணிகளுக்கு மட்டும் ரூ.230 கோடி ஒதுக்கி உள்ளார்கள். இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிரட்டலான கிராபிக்ஸ் காட்சிகளை படத்தில் இடம்பெறச் செய்ய இவ்வளவு பெரிய தொகையை செலவிடுகின்றனர்.

ஏற்கனவே பிரபாசின் ஆதிபுருஷ் படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் அலங்கோலமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அதுமாதிரி இல்லாமல் ஹாலிவுட் தரத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்க இருக்கிறார்கள்.

படத்தில் பிரபல தெலுங்கு டைரக்டர் ராஜமவுலியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி உள்ளது.