ஓ.டி.டி.யில் வெளியாகும் ரகுல் பிரீத் சிங் படம்

ரகுல் பிரீத் சிங் தற்போது தமிழில் ‘இந்தியன்-2’, ‘அயலான்’ படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் பல வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரகுல் பிரீத் சிங் இந்தியில் நடித்து வரும் ‘ஐ லவ் யூ’ என்ற படம், தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படாமல் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாக இருக்கிறது.

நிகில் மகாஜன் இயக்கியுள்ள இந்த படத்தில் பவில் குலாட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். காதல் கலந்த திரில்லர் படமாக தயாராகியுள்ள ‘ஐ லவ் யூ’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வருகிற 16-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.

ஏற்கனவே பல திரைப்படங்கள் ஓ.டி.டி. தளங்களில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளன. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.