ஒரே கட்டிடத்தில் அலுவலகம் வாங்கிய நடிகர், நடிகைகள்...!

நடிகர், நடிகைகள் ஒரே கட்டிடத்தில் அலுவலகங்களை விலைக்கு வாங்கியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

இந்தி நடிகர், நடிகைகள் மும்பையில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடங்களில் பல கோடிகளுக்கு வீடுகளையும், அலுவலகங்களையும் வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார்கள். அனைத்து நடிகர், நடிகைகளுமே ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இவர்களை குறிவைத்து பெரிய கட்டுமான நிறுவனங்கள் ஆடம்பரமான வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகின்றன.

இந்த நிலையில் நடிகர், நடிகைகள் ஒரே கட்டிடத்தில் அலுவலகங்களை விலைக்கு வாங்கியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மும்பை ஓஷிவாரா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள கட்டிடத்தின் 21-வது மாடியில் ரூ.29 கோடி விலையில் 4 அலுவலகங்களை வாங்கி இருக்கிறார்.

இதே கட்டிடத்தின் 4-வது மாடியில் நடிகர் கார்த்திக் ஆர்யன் ரூ.10 கோடிக்கு அலுவலகம் வாங்கி இருக்கிறார். இதே கட்டிடத்தின் நான்காவது மாடியில் நடிகை சாராஅலிகான் தனது தாயாருடன் இணைந்து ரூ.9 கோடிக்கு அலுவலகம் வாங்கி இருக்கிறார். நடிகை கஜோலும் இதே கட்டிடத்தில் ரூ.7.64 கோடிக்கு அலுவலகம் ஒன்றை வாங்கி இருக்கிறார்.