எங்கு சென்றாலும் தலையில் குல்லா அணிவது ஏன்..? சிவகார்த்திகேயன் சொன்ன தகவல்

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபமாக எங்கு சென்றாலும் தலையில் கருப்பு நிற குல்லா அணிந்து செல்கிறார்.

சென்னை,

சென்னையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயம், மிஷ்கின் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து தனியாக சிவகார்த்திகேயனை சந்தித்து பத்திரிகையாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அப்போது டிக்கெட் கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு, இது தொடர்பாக அரசு முடிவெடுக்கும். எனக்கூறினார்.

மேலும், எங்கு சென்றாலும் கருப்பு நிற குல்லா அணிவது ஏன் என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு, அடுத்த படத்திற்கான லுக் வரும் வரையிலும் இதனை கழற்றக்கூடாது என என்னுடைய இயக்குநர் கூறியுள்ளார். அதனால் இதனை நான் அணிந்துள்ளேன். எவ்ளோ வெயில் அடித்தாலும் இதனை நான் போட்டு ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் என்று அவர் கூறினார்.