இரட்டை வேடத்தில் விஜய்?

லியோ படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வலைத்தளத்தில் பரவி வருகிறது.

நடிகர் விஜய், வாரிசு படத்துக்கு பிறகு லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே மாஸ்டர் படம் வந்துள்ளது. லியோ படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், சஞ்சய்தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

மிஷ்கின், சஞ்சய்தத் இருவரும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. லியோ படப்பிடிப்பு காஷ்மீர் பகுதிகளில் 2 மாதங்கள் நடந்தது. தற்போது அங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர்.

பனையூர் பகுதியிலும், வடபழனியில் உள்ள ஸ்டுடியோவிலும் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இந்த படம் பாட்ஷா பட சாயலில் தயாராவதாக ஏற்கனவே தகவல்கள் பரவின. தற்போது அது மாதிரியான படம் இல்லை என்றும், முழுமையாக வேறு கதையம்சத்தில் தயாராகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வலைத்தளத்தில் பரவி வருகிறது. ஒரு விஜய்க்கு திரிஷா ஜோடியாகவும், இன்னொரு விஜய்க்கு பிரியா ஆனந்த் ஜோடி என்றும் பேசுகின்றனர். இந்த படம் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகிறது.