இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... அதிர்ச்சி கொடுத்த நடிகை வனிதா...!

நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டருக்கும் வனிதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின்னர் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்தனர்.

சென்னை,

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, தமிழ் திரையுலகில் ஹீரோயினாக நடித்துள்ளார். விஜய், ராஜ்கிரண் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள வனிதா, திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவை விட்டு விலகினார். வனிதாவுக்கு கடந்த 2000-ம் ஆண்டு, முதல் திருமணம் நடைபெற்றது. அவர் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஸ்ரீஹரி என்கிற ஒரு மகனும் உள்ளார். 2007-ம் ஆண்டு ஆகாஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் வனிதா.

ஆகாஷை பிரிந்த உடனே ஜெய் ராஜன் என்கிற தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் வனிதா. பின்னர் அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். இந்த ஜோடிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. பின்னர் தந்தை விஜயகுமாருடன் பிரச்சினை ஏற்பட்டதால் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ்ந்து வந்தார் வனிதா. அந்த சமயத்தில் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டருக்கும், வனிதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின்னர் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்தனர்.

இதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தனியார் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட வனிதா, அந்நிகழ்ச்சியில் களேபரம் செய்து டிஆர்பி-யை எகிற வைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆன வனிதா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டார் வனிதா. வழக்கம் போல் அவரையும் திருமணமான மூன்றே மாதத்தில் விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது.

இப்படி திருமணத்துக்கும், வனிதாவுக்கும் செட்டே ஆகாமல் இருந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் திருமணம் செய்துகொண்டதாக பேட்டி ஒன்றில் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் வனிதா. இது எப்போ என அனைவரும் பதறிப்போக, அதற்கு விளக்கமும் கொடுத்திருக்கிறார் வனிதா. அதன்படி, அவர் தற்போது சினிமாவை தான் காதலித்து திருமணம் செய்துள்ளாராம். இனி தன்னுடைய முழு கவனமும் சினிமாவில் தான் இருக்கும். அதனால் இனி விவாகரத்திற்கு வாய்ப்பே இல்லை என கூறி இருக்கிறார் வனிதா.