இந்தியாவை தூய்மையாக வைப்போம் - நடிகர் ரஜினிகாந்த் பதிவு

இந்தியாவை தூய்மையாக வைப்போம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை,

பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார். தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த மாதம் 15-ந்தேதியில் இருந்து நாளை வரை ‘குப்பையில்லா இந்தியா’ என்ற பிரசாரம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று நடைபெறும் தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி பல்வேறு இடங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், முதல்-மந்திரிகள், மற்றும் பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ‘இந்தியாவை தூய்மையாக வைப்போம்’ என்று கூறியுள்ளார். இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தூய்மையான சூழலில் இருந்தே ஆரோக்கியமான சூழல் தொடங்குகிறது. இந்தியாவை தூய்மையாக வைப்போம்” என்று தெரிவித்து உள்ளார்.