இணையத்தில் கசிந்த ரஜினி படக்காட்சி

ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா டைரக்டு செய்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பிராமையா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஏற்கனவே மும்பையில் இதன் படப்பிடிப்பு நடந்தது. திருவண்ணாமலையிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். தற்போது புதுச்சேரி பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். அங்குள்ள ஒரு பஞ்சாலையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தின் தோற்றத்தில் நடந்து வரும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இதை ரசிகர்கள் வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

படப்பிடிப்பு நடந்தபோது யாரோ செல்போனில் படம்பிடித்து இதை வெளியிட்டு உள்ளார்.

இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து முடித்துள்ளார். அடுத்து ஜெய்பீம் படத்தை எடுத்து பிரபலமான ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.